UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM
ADDED : ஜூலை 02, 2023 04:32 PM
சென்னை:
லண்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமன்ட்ஸ்- கியூ.எஸ்., என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக பல்கலை தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.அதன்படி 2024ம் ஆண்டுக்கான கியூ.எஸ்., தரவரிசை பட்டியலில், இந்தியாவின் மிக சிறந்த தனியார் பல்கலையில், சண்டிகர் பல்கலை முதலிடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள இப்பல்கலையில் 20க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 20,000 பேர் படிக்கின்றனர். வணிகம், மேலாண்மை பட்டப்படிப்புகளில் சிறந்து விளங்கும் இப்பல்கலை, 2023ல் இந்திய பல்கலை தரவரிசை பட்டியலில் 27வது இடம் பெற்றது.சண்டிகர் பல்கலை துணைவேந்தர் சத்னம் சிங் சந்து கூறியதாவது:
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் சண்டிகர் பல்கலை, ஆராய்ச்சியிலும் சாதனை படைத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன், பல்வேறு துறைகளில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறும் வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தரமான கல்வி, ஆசிரியர் - மாணவர் விகிதம் ஆகியவற்றில் கவனம், ஆசியர்கள், மாணவர்களின் தொடர் முயற்சி ஆகியவை எங்களின் வெற்றிக்கு காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
