UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM
ADDED : ஜூலை 02, 2023 04:32 PM
சென்னை:
ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில், செயற்கை நுண்ணறிவு குறித்த ஒருநாள் கருத்தரங்கம், கிண்டியில் நேற்று நடந்தது. ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினரான எல்காட் நிர்வாக இயக்குனர் அருண்ராஜ் பேசியதாவது:
வளர்ந்த நாடுகள், தகவல் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக திகழ்கின்றன. அதேவரிசையில் தமிழகம் முன்னேறி வருகிறது. சென்னை நகரில் போக்குவரத்து சீர்படுத்தும் பிரச்னைக்கு செயற்கை நுண்ணறிவு வாயிலாக தீர்வு காண முடியும். நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்க்கை, வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ராஜலட்சுமி கல்வி குழுமங்களின் தலைவர் தங்கம் மேகநாதன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து, 25 ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு பாடம் மட்டுமே இருந்தது. தற்போது, ஒரு பாடப்பிரிவே உள்ளது. தொழில்நுட்பம் வாயிலாக விவசாய பயன்பாடு, வானிலை, பருவகாலம், பேரிடர் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அறிய முடியும், என்றார்.
