UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM
ADDED : ஜூலை 03, 2023 06:20 AM
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் முதன் முதலாக, ஜேட்டா கலந்தாய்வில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர்.மத்திய அரசின் பொறியியல் கல்லுாரிகளான, ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் சேர்வதற்காக ஆண்டுக்கு, இரண்டுமுறை மத்திய அரசால், ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை தனியார் பள்ளி மாணவர் கள் மட்டுமே அதிகளவில் எழுதி வந்தனர். கடந்தாண்டு நாமக் கல் மாவட்டத்தில், நான்கு அரசு பள்ளிகளில் இருந்து, 108 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். 92 பேர் ஏப்ரலில் தேர்வெழுதிய நிலை யில், 19 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர மற்றொரு தேர்வு எழுத வேண்டும். இதற்காக மாணவர்களுக்கு சென்னையில், 45 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.ஆனால், மாணவர்களால் ஐ.ஐ.டி.,யில் சேர அண்மையில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற முடிய வில்லை. இதனால் மாணவர்கள் முதல்கட்ட தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் என்.ஐ.டி., போன்ற பொறியியல் கல்லுாரிகளில் சேர, ஜேட்டா கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில் கொல்லிமலை ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி மாணவர் ஹரிஹரன், மாணவி பூமிகா, பழையபாளையம் அரசு பள்ளி மாணவி வர்ஷா ஆகியோர் திருச்சி என்.ஐ.டி.,யிலும்; பழையபாளைம் அரசு பள்ளி மாணவி தேன்மொழி தேசிய அளவிலான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, மத்திய பிரதேசம் ஜபல்பூர் தேசிய சட்டப்பல்கலை கலந்தாய்வில் கலந்துகொள்ள சென்றுள்ளனர். புதுப்பாளையம் மாணவி இலக்கியா காஞ்சிபுரம் கல்லுாரியில் சேர இடம் கிடைத்துள்ளது. மீதமுள்ள, 15 மாணவர்களுக்கு அடுத்தடுத்த சுற்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
