தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் வருத்தம்

வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் வருத்தம்

வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் வருத்தம்


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 06:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:
பள்ளி மாணவ, மாணவியருக்கான, உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:
மேல்படிப்புக்கு வசதியில்லை அல்லது ஆர்வமில்லாதவர்களுக்கு வழிகாட்டவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பர்கூரில் அரசு மலைவாழ் நலப்பள்ளியில் படித்த ஒரு மாணவி, நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். அவருக்கு பரிசாக அளித்த புத்தகத்தில், நீங்கள் நன்றாக மேல்படிப்பு படிக்க வேண்டும் என குறிப்பிட்டு தந்தேன். இதில் ஒரு வருத்தம். அந்த மாணவி இன்று வரை உயர்கல்விக்காக கல்லுாரியில் சேரவில்லை. ஆனாலும் எனக்கு கீழ் உள்ள அதிகாரிகள், அந்த மாணவி மேல்படிப்புக்கு செல்ல, பல முயற்சி செய்து கொண்டுதான் உள்ளனர். உயர்கல்விக்காக இன்று எத்தனையோ வசதி செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்போடு கல்வியை நிறுத்த வேண்டாம் என மாணவர்களை மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஈரோடு சி.இ.ஓ., குழந்தை ராஜன், கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷிணி, கோபி தாசில்தார் உத்திரசாமி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us