தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி கட்டட திறப்பு ரத்து மாணவிகள் ஏமாற்றம்

கல்லுாரி கட்டட திறப்பு ரத்து மாணவிகள் ஏமாற்றம்

கல்லுாரி கட்டட திறப்பு ரத்து மாணவிகள் ஏமாற்றம்


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 07:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டட திறப்பு விழா, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் மாணவியர், பெற்றோர் ஏமாற்றமடைந்தனர்.திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், ஏராளமான மாணவியர் படிக்கின்றனர். இங்குள்ள கட்டடம் பழமையானதாக இருந்ததால், கல்லுாரி வளாகத்தில் இருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. இக்கட்டட திறப்பு விழா, ஜூ30ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. அதற்காக கட்டடத்தை வண்ண காகிதங்களால் அலங்கரித்து தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவிகள் ஏமாற்றமடைந்தனர். வகுப்பறை பற்றாக்குறையால் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படுகிறது. புதிய கட்டடம் திறக்கப்பட்டால், அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஒரே சமயத்தில் பாடம் பயிற்றுவிக்கும் சூழ்நிலை வரும்; இதன் வாயிலாக நேர விரயம் தவிர்க்கப்பட்டு, மாணவிகளுக்கான கற்றல் நேரம் அதிகரிக்கும் என்பதால் புதிய கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us