UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM
ADDED : ஜூலை 04, 2023 03:37 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், கல்லுாரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும், அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தனியாக விண்ணப்பித்து, பள்ளிகள் வழியே பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு பள்ளிக்கல்வி துறையின் செயலி வழியே பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் விபரங்களை வகுப்பு வாரியாக பூர்த்தி செய்து, வகுப்பாசிரியர்கள் உதவியுடன், பள்ளிக்கல்வித் துறையின் செயலியில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு தலைமை ஆசிரியர்கள் ஒப்புதல் அளித்து, போக்குவரத்து துறையில் இருந்து பஸ் பாஸ் பெற வேண்டும் என்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
