தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரவு வரை நடந்த உதவி ஜெயிலர் தேர்வு

இரவு வரை நடந்த உதவி ஜெயிலர் தேர்வு

இரவு வரை நடந்த உதவி ஜெயிலர் தேர்வு


UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM

ADDED : ஜூலை 04, 2023 06:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM ADDED : ஜூலை 04, 2023 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் கல்லுாரியில் உதவி ஜெயிலர் தேர்வு சர்வர் பழுது காரணமாக இரவு 11:30 மணி வரை நடைபெற்றதால் அதில் பங்கேற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு வாயிலாக சிறை மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் காலியாக உள்ள உதவி ஜெயிலர் பணியிடங்ளுக்கு ஆன்லைன் தேர்வு நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் கல்லுாரியில் இந்தத் தேர்வு இரு பிரிவுகளாக நடந்தது. காலையில் 65 பேர் தேர்வு எழுதினர். பகல் 2:00 மணிக்கு எழுத துவங்கிய, 63 பேருக்கு மாலை 5:00 மணிக்கு தேர்வு முடிய வேண்டும். ஆனால் சர்வர் பழுது காரணமாக இரவு 11:30 மணி வரை தேர்வு நீடித்தது. இதனால் தேர்வில் பங்கேற்றோர் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகினர்.இது குறித்து தேர்வு அதிகாரி ஒருவர் கூறுகையில், பயோமெட்ரிக் முறையில் நடந்த தேர்வின் போது இதற்காக உருவாக்கப்பட்ட சர்வரில் பழுது ஏற்பட்டது. இதனால் இரவு 11:30 மணி வரை தேர்வு நீடித்தது. இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் தேர்வு எழுத சிரமப்பட்டனர். இணைப்பு கிடைக்க கிடைக்க, அனுமதிக்கப்பட்ட மொத்தம் 3 மணிநேரம் வரை தேர்வர்கள் எழுதியுள்ளனர், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us