UPDATED : ஜன 05, 2010 12:00 AM
ADDED : ஜன 05, 2010 11:28 AM
அ நிறம் | அளவு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், ‘இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங்’ துறை சார்பில், சர்வதேச கருத்தரங்கு ஜன. 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.
‘ஐ.சி.ஏ.ஐ.ஈ.ஏ., - 2010’ என்ற தலைப்பிலான இந்த கருத்தரங்கில், தொழில்துறை சார்ந்து பொறியியல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் விவாதிக்க உள்ளனர். இந்த கருத்தரங்கை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களின், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்கின்றனர்.
