மத்திய கப்பல் கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் படிக்க வாய்ப்பு
மத்திய கப்பல் கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் படிக்க வாய்ப்பு
UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 03:39 AM
மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி துறையின் கீழ் இயங்கும் சிப்நெட் எனும், மத்திய கப்பல் மாலுமி மற்றும் கப்பல் பொறியியல் கல்வி நிறுவனம் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, உதவித் தொகையுடன் தொழில்நுட்ப கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை, கொச்சி, விசாகப்பட்டினத்தில், வெசல் நேவிகேட்டர் எனும் மாலுமி மற்றும் மெரைன் பிட்டர் டிரேட் எனும் கப்பல் பொறியாளர் படிப்புகள் உள்ளன. விண்ணப்பங்களை, www.cifnet.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி வரும் 17ம் தேதிக்குள், இயக்குனர், சிப்னெட், பைன் ஆர்ட்ஸ் அவென்யூ, போர்ஷோர் ரோடு, கொச்சி - 682 016 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.தேர்வாகும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மாதம் 1,500 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். பயிற்சி முடித்தபின், ஆழ்கடல் கப்பலின் இன்ஜின் ஓட்டுனர், இன்ஜினியர், மேட், ஸ்கிப்பர் ஆகிய பணிகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, cifnetchennai.govt@gmail.comg என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 74014 73752, 70292 58690, 94452 13673 ஆகிய மொபைல் எண்களிலோ தொடர்புகொள்ளலாம்.
