தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பரமக்குடி: ஆக.8ல் புத்தக திருவிழா

பரமக்குடி: ஆக.8ல் புத்தக திருவிழா

பரமக்குடி: ஆக.8ல் புத்தக திருவிழா


UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM

ADDED : ஜூலை 06, 2023 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM ADDED : ஜூலை 06, 2023 09:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி:
பரமக்குடியில் ஆக.8 முதல் 15 வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மக்கள் நூலகம் இணைந்து புத்தக திருவிழா நடத்த உள்ளனர்.பரமக்குடியில் மக்கள் நூலகம் சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து புத்தக திருவிழா ஆக.8ல் பரமக்குடி சந்தை பேட்டை அருகே தனியார் மகாலில் நடக்கிறது. இதன் கவுரவ தலைவர்களாக நீதிபதி பூபாலன், நல்லாசிரியர் சந்தியாகு, வக்கீல் ராஜேந்திரன் உள்ளனர். தாசில்தார் சேகர் தலைவராகவும், வக்கீல் பசுமலை செயலாளர், ஆசிரியர் வசந்தகுமார் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். புத்தகத் திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. மாலை நேரங்களில் மதுரை முத்து, நடிகை ரோகிணி, மதுக்கூர் ராமலிங்கம், புதுகை பூபாளம் உள்ளிட்டோர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சொற்பொழிவு, பரிசளிப்பு நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us