UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 09:26 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:
முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் போட்டி ஆண்டிபட்டி அரசு பெண்கள் ஐ.டி.ஐ., வளாகத்தில் நடந்தது.மாவட்ட அளவிலான போட்டியில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். ஆண்டிபட்டி அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் ஸ்மார்ட்போன் டெக்னீசியன் மற்றும் ஆப் பரிசோதித்தல் பிரிவில் படிக்கும் மாணவி பரமேஸ்வரி சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அதே போல் சிலம்பம் ஒற்றை வாள்வீச்சு போட்டியில் மாவட்ட அளவில் வெண்கலம் வென்றார். வெற்றி பெற்ற மாணவி பரமேஸ்வரி, ஊக்குவித்த பயிற்சிநர் திலகம் ஆகியோருக்கு ஐ.டி.ஐ., முதல்வர் சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார்.
