UPDATED : ஜூலை 07, 2023 12:00 AM
ADDED : ஜூலை 07, 2023 10:43 AM
மயிலாப்பூர்:
பிராமின் ஜீனோசைடு எனும் ஆங்கில புத்தக வெளியீட்டு விழா, மயிலாப்பூரில் நடந்தது வருகிறது. இந்த நிகழ்ச்சியை தினமலர் இணையதளம், தினமலரின் சமூக வலைதள பக்கங்களில் வாசகர்கள் பார்க்கலாம்.எழுத்தாளர் பாலாஜி மகாலிங்கம் எழுதிய, பிராமின் ஜீனோசைடு எனும் ஆங்கில புத்தக வெளியீட்டு விழா, மயிலாப்பூர், கிரிஜா கார்டன் பகுதி, ஆர்.ஆர்.சபாவில் நடந்தது. விழாவிற்கு, ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னர் ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக, விராட் ஹிந்துஸ்தான் சங்க தலைவர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் எழுத்தாளர் பாஸ்கரன் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த இரு நுாற்றாண்டுகளாக, பிராமணர்களுக்கு நேர்ந்த கொடுமைகள், இனப்படுகொலைகள், ஒடுக்குமுறைகள் மற்றும் தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, இந்த நுால் விரிவாக விவரிக்கிறது. இது குறித்த, மேலும் விவரங்களுக்கு, 70100 68836 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
