தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை முடிக்கும் டாக்டர்களுக்கு 5 ஆண்டுகள் அரசு பணி கட்டாயம்

முதுநிலை முடிக்கும் டாக்டர்களுக்கு 5 ஆண்டுகள் அரசு பணி கட்டாயம்

முதுநிலை முடிக்கும் டாக்டர்களுக்கு 5 ஆண்டுகள் அரசு பணி கட்டாயம்


UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM

ADDED : ஜூலை 08, 2023 03:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM ADDED : ஜூலை 08, 2023 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2,100 எம்.டி.,  எம்.எஸ்., படிப்புகள் உள்ளன. அதில், 1,050 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கிறது. மீதமுள்ள 1,050 இடங்களில், 50 சதவீத இடங்கள் தொலைதுார கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி, 525 இடங்கள் இளநிலை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.இந்த 2023 - 24ம் கல்வியாண்டுக்கு மாணவர்கள் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. அதன்படி, அரசு டாக்டர்களுக்கான ஒதுக்கீட்டில் சேருவோர், முதுநிலை படிப்பை முடித்த பின், அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது:
அரசு டாக்டர்களுக்கான ஒதுக்கீட்டில், முதுநிலை மருத்துவம் படிக்கும் டாக்டர்கள், படித்து முடித்த பின், தனியாகவோ, தனியார் மருத்துவமனைகள் அல்லது வெளிநாடுகளுக்கோ பணியாற்ற செல்கின்றனர். அவர்களுக்கு அரசு ஒதுக்கிய இடங்கள் மற்றும் செலவு செய்த பணம் வீணாகிறது.இவற்றை தடுக்க, முதுநிலை படிப்பை முடித்த பின், அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என, இதற்கு முன் விதி இருந்தது. இந்தாண்டு முதல் ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.அவ்வாறு பணியாற்ற விரும்பாத முதுநிலை டிப்ளமா மாணவர்கள் 20 லட்சம் ரூபாய்; முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்கள் 40 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டு செல்லலாம். அவ்வாறு பணம் செலுத்தாதோர்; அரசு மருத்துவமனைகளில் கட்டாய பணி செய்யாதவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us