தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி தினம்

காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி தினம்

காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி தினம்


UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM

ADDED : ஜூலை 08, 2023 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM ADDED : ஜூலை 08, 2023 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் வரும் ஜூலை, 15ம் தேதி அரசு பள்ளிகள் செயல்படும்; அன்று, வேலை நாள் என கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பணிகள் தொடர்பான பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டி மாணவ, மாணவியருக்கு நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும்.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 
பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் வழிகாட்டுதல்கள் பின்பற்றி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளை போன்று வட்டார, மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. கல்வி அலுவலகங்களிலும், காமராஜ் போட்டோ வைத்து, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us