UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM
ADDED : ஜூலை 08, 2023 04:47 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் கவர்னர் ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பாளையக்காடு பகுதியில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்ற ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன், துாய்மை பணியாளர்கள் நுாறு பேருக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கினார். மேலும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 20 பேருக்கு சேமிப்பு புத்தகம்; உஜ்வாலா திட் டத்தில் 10 பேருக்கு காஸ் இணைப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 15 பேருக்கு பரிசுகளும் வழங்கினார்.
