UPDATED : ஜூலை 09, 2023 12:00 AM
ADDED : ஜூலை 09, 2023 07:41 AM
அ நிறம் | அளவு
சென்னை:
மகளிர் உரிமைத் தொகை, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.அதில், குடும்ப தலைவி பெயர், ஆதார் எண், ரேஷன் கார்டு எண், திருமண நிலை, தொலைபேசி எண், சொந்த வீடா, வாடகை வீடா ஆகிய கேள்விகள் இடம்பெற்று உள்ளன. மேலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தொழில், சொத்து விபரம், நில உடைமை விபரம், வாகன விபரம் உட்பட, 13 கேள்விகள் இடம்பெற்று உள்ளன.
