தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளிகளில் 13,158 மாணவர்கள் சேர்ப்பு

மாநகராட்சி பள்ளிகளில் 13,158 மாணவர்கள் சேர்ப்பு

மாநகராட்சி பள்ளிகளில் 13,158 மாணவர்கள் சேர்ப்பு


UPDATED : ஜூலை 09, 2023 12:00 AM

ADDED : ஜூலை 09, 2023 07:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2023 12:00 AM ADDED : ஜூலை 09, 2023 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து, புதிதாக இணைக்கப்பட்ட 139 பள்ளிகள் உட்பட 420 பள்ளிகள் உள்ளன.இங்கு, தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி மற்றும் விளையாட்டு கட்டமைப்பு, மேஜைகள் உட்பட அடிப்படை கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 80 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதனால், மாநகராட்சி பள்ளிகளில், பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில், 2023 - 24ம் கல்வியாண்டில் 13,158 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.இவை கடந்தாண்டு புதிய சேர்க்கையை ஒப்பிடுகையில் 1,243 மாணவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் இந்தாண்டு சேர்ந்துள்ளனர். வரும் ஆக., மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால், மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் வரை படிப்பதற்கான கட்டமைப்பு உள்ளது. தகுதியான ஆசிரியர்கள் வாயிலாக சிறப்பான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. எனவே, மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்த, அந்தந்த தலைமையாசிரியர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us