தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் நீதிபதி தேர்வுக்கு அவகாசம் கேட்ட மனு தள்ளுபடி

சிவில் நீதிபதி தேர்வுக்கு அவகாசம் கேட்ட மனு தள்ளுபடி

சிவில் நீதிபதி தேர்வுக்கு அவகாசம் கேட்ட மனு தள்ளுபடி


UPDATED : ஜூலை 09, 2023 12:00 AM

ADDED : ஜூலை 09, 2023 07:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2023 12:00 AM ADDED : ஜூலை 09, 2023 07:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.உயர் நீதிமன்றத்தில் டாக்டர் எஸ்.கே.கார்வேந்தன் என்பவர் தாக்கல் செய்த மனு:
சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் 2023 ஜூன் 1ல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 30 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையின் இணைப்பு பெற்றுள்ள 24 சட்டக் கல்லுாரிகள் ஜூன் 30ல் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளன. அந்தக் கல்லுாரிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களால் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது என்பதால் விண்ணப்ப தேதியை தள்ளி வைக்கக் கோரி மனு அனுப்பப்பட்டது.அந்த மனுவை பரிசீலிக்கவும் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக கடைசி தேதியை நீட்டிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சார்பில் வழக்கறிஞர் பி.விஜய் ஆஜரானார்.முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
அறிவிப்பு வெளியிட்ட தேதிக்கு முன் மூன்று ஆண்டுகளுக்குள் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். புதிதாக சட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். எனவே அறிவிப்பு வெளியிட்ட தேதியில் போதிய தகுதியை பெற்றிருக்கவில்லை. மேலும் இந்த வழக்கு பணி சம்பந்தப்பட்டது. பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தை அணுக முடியும். பணிகள் தொடர்பான விஷயத்தில் பொது நல வழக்கு வராது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us