தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/70 ஆயிரம் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி

70 ஆயிரம் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி

70 ஆயிரம் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி


UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM

ADDED : ஜூலை 11, 2023 04:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM ADDED : ஜூலை 11, 2023 04:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கையால், ஐந்தாண்டுகளில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறியதாவது:
சென்னை மருத்துவமனையில், தவறான சிகிச்சையால், பச்சிளம் குழந்தைக்கு கை பறிபோன விவகாரத்தில், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., மற்றும் டாக்டர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கில், இதுவரை 14 ஆயிரம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 வழக்குகளில் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் போக்சோ வழக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு அதிகரித்து வருகிறது. ஆணையத்தின் மூலமாக அரசுக்கு வழங்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் ஆய்வு செய்து, கவர்னர், ஆணைய தலைவர் மற்றும் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்து விட்டேன். இந்த விவகாரம், ஆளுமைகளுக்குள் நடந்து வருகிறது. இது குறித்து, ஆணைய உறுப்பினர் என்ற முறையில் பதில் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us