தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரி: அமைச்சர் சுப்ரமணியம்

6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரி: அமைச்சர் சுப்ரமணியம்

6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரி: அமைச்சர் சுப்ரமணியம்


UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM

ADDED : ஜூலை 11, 2023 04:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM ADDED : ஜூலை 11, 2023 04:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
தமிழகத்தில், தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், பெரம்பலுார், காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சுப்பிரமணியம் பேசினார்.சேலம் அரசு மருத்துவக் கல்லுாரியில், 28வது இளங்கலை மருத்துவ பட்டமளிப்பு விழா, நேற்று, நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மணி வரவேற்றார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியம், எம்.பி.பி.எஸ்., முடித்த, 58 மாணவியர், 40 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லுாரி என்ற இலக்கு, 2011ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு, ஓராண்டுக்கு முன் தான், இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லுாரி என்ற இலக்கை வெளியிட்டது. தற்போது, தமிழகத்தில், 36 அரசு மருத்துவக் கல்லுாரி, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி ஒன்று, 21 சுயநிதி மருத்துவக்கல்லுாரி, 13 நிகர்நிலை மருத்துவக்கல்லுாரி என, 71 மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, ஆண்டுக்கு, 11 ஆயிரம் பேர் மருத்துவர்களாக வெளியேறுகின்றனர்.இந்தியாவில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் அதிகம் கொண்ட தமிழகத்தில், தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், பெரம்பலுார், காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி கிடைத்தால், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லுாரி என்ற இலக்கை தமிழகம் நிறைவு செய்யும். 1990ல், ஒரு மருத்துவக்கல்லுாரி கட்ட, 40 கோடி ரூபாய் தேவைப்பட்டது.தற்போது, 400 கோடி ரூபாய் செலவாகிறது. 150 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள, சேலம் அரசு மருத்துவக்கல்லுாரியில், மருத்துவ சேவையை மேம்படுத்தி, கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும். சேலத்தை அடுத்து மதுரை, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கட்டண சிகிச்சை வார்டு தொடங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us