தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் குறித்த அறிக்கையை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், 2022 - 23ம் நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து, 65,513 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, 2021 - 22ம் நிதியாண்டில், 70,982 கோடி ரூபாயாக இருந்தது. குஜராத் மாநிலம் 38,851 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் இரண்டாவது இடத்திலும், மஹாராஷ்டிரா மாநிலம், 31,000 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.கடந்த 2018 - 19ம் நிதியாண்டு முதல், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, ஜவுளி ஏற்றுமதியில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதே போல, 2020 - 2021 முதல், குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்திலும், மஹாராஷ்டிரா மாநிலம் மூன்றுவாது இடத்திலும் உள்ளன. நடப்பு நிதியாண்டிலும், ஜவுளி ஏற்றுமதியில், 9,350 கோடி ரூபாயுடன் தமிழகம் முதல் இடத்தில் நீடிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us