தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/121 அடி நீளத்தில் காமராஜர் ஓவியம்: மாணவி அசத்தல்

121 அடி நீளத்தில் காமராஜர் ஓவியம்: மாணவி அசத்தல்

121 அடி நீளத்தில் காமராஜர் ஓவியம்: மாணவி அசத்தல்


UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM

ADDED : ஜூலை 15, 2023 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM ADDED : ஜூலை 15, 2023 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி திருநெல்வேலியில் 121 அடி நீளமுள்ள கதர் துணியில் அவரது வாழ்க்கை வரலாற்றை மதுரை இன்ஜினியரிங் கல்லுாரி மாணவி ஓவியங்களாக தீட்டியிருந்தார்.திருநெல்வேலியை சேர்ந்த செந்தில்குமார்- ராஜலட்சுமி தம்பதியின் மகள் சிவஹரிணி. மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இவர் திருநெல்வேலியில் செயல்படும் சிவராம் கலைக்கூடத்தில் ஓவியம் பயின்று வருகிறார்.காமராஜரின் 121 வது பிறந்த தினத்தையொட்டி 121 அடி நீளம் உள்ள கதர் துணியில் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவர் கொண்டு வந்த திட்டங்களையும், அணைகளையும் வண்ண ஓவியங்களாக தீட்டி இருந்தார். கடந்த ஒரு ஆண்டாக இந்த முயற்சியில் ஈடுபட்டார்.121 அடி நீளமுள்ள ஓவியங்களின் கண்காட்சி இங்கு வ.உ.சி., மைதானத்தில் நடந்தது. எழுத்தாளர் நாறும்புநாதன் துவக்கி வைத்தார். ஓவிய ஆசிரியர்கள் சிவராமகிருஷ்ணன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு பள்ளி மாணவிகள் ஓவியங்களை பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us