சாலை பாதுகாப்பு விதி: மாணவ, மாணவியர் பேச்சுப் போட்டி
சாலை பாதுகாப்பு விதி: மாணவ, மாணவியர் பேச்சுப் போட்டி
UPDATED : ஜன 08, 2010 12:00 AM
ADDED : ஜன 08, 2010 10:54 AM
சென்னை: செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், 21வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.
வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலர் நெல்லையப்பன் தலைமையில் ஆய்வாளர்கள் முத்து, சுரேஷ் குமார் ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விளக்கினர். இதையடுத்து, சாலை விதிமுறைகள் குறித்து, மொண்டியம்மன் நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட பேச்சுப் போட்டி நடந்தது. அதை தொடர்ந்து, பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும் நடந்தன.
தாம்பரம்: சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சீயோன் பள்ளியில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
தாம்பரம் போக்குவரத்து போலீஸ் சரகத்திற் குட்பட்ட ஜி.எஸ்.டி., சாலை, முடிச்சூர் சாலை, குரோம்பேட்டை, கேம்ப் ரோடு ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதைதொடர்ந்து, சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டிமன்றம் நடந்தது. இதில், பள்ளி முதல்வர் விஜயன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள், டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
