UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM
ADDED : ஜூலை 15, 2023 10:45 AM
சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் 89 மாணவ - மாணவியருக்கு பூபேந்தர் யாதவ் பட்டங்களை வழங்கினார்.அவர் பேசியதாவது:
மருத்துவர்கள் எப்போதும் மாணவர்களாக இருந்து கற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக மன உளைச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.இவ்வாறு பூபேந்தர் யாதவ் பேசினார்.விழாவில் தொலை மருத்துவ ஆலோசனைப் பிரிவு; நலமான குடும்பம்; நலமான வாழ்வு என்னும் குடும்ப தத்தெடுப்பு திட்டம்; தன்னார்வ உடல் மற்றும் உடல் உறுப்புகள் தானம் ஆகியவற்றை துவக்கி வைத்தார். உடல் தானம் செய்த இருவருக்கு சான்றிதழ் வழங்கினார். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராமேஸ்வர் தெலி இ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் ராஜேந்திரகுமார் பங்கேற்றனர்.
