தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்: கோவை மாணவி

டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்: கோவை மாணவி

டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்: கோவை மாணவி


UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM

ADDED : ஜூலை 17, 2023 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM ADDED : ஜூலை 17, 2023 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
டாக்டருக்கு பயின்று மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என, மருத்துவ தரவரிசை பட்டியலில் நான்காவது இடம் பிடித்த கோவை மாணவி கூறினார்.கோவை பீளமேட்டை சேர்ந்த கண் நோயியல் நிபுணர் டாக்டர் சத்தியன் நாகமலை. மனைவி, சர்க்கரை நோயியல் நிபுணர் டாக்டர் சுதா நடராஜன். இவர்களது மகள் சஞ்சனா நாகமலை, கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். சஞ்சனா கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில், 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 91-வது இடத்தைப் பிடித்தார். மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சஞ்சனா நாகமலை மாநில அளவில் 4-வது இடத்தை பிடித்தார்.மாணவி சஞ்சனா நாகமலை கூறுகையில், எனது பெற்றோர் போல், டாக்டராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என, சிறுவயது முதல் ஆசை இருந்தது. அதை நிறைவேற்ற கடுமையாக உழைத்தேன். பெற்றோர், ஆசிரியர்கள் மிகவும் ஒத்துழைப்பு தந்தனர். நீட் தேர்வை எவ்வித அச்சமும் இன்றி எளிமையாக எதிர்கொண்டேன். இதனால் முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றேன் அகில இந்திய அளவில், 91- வது இடம் பிடித்துள்ளதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ படிப்பு படிக்க உள்ளேன்&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us