UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 10:22 AM
தர்மபுரி:
தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது என, ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் பெரியார் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, எம்.ஏ., ஆங்கிலம், எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், கம்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், பயோடெக்னாலஜி ஆகிய பாட பிரிவுகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.இப்பாட பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள், துறைத்தலைவர்களை அணுகி, இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து நேரடியாக சேரலாம். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாணவர்கள், 94897 90205 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
