UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 10:31 AM
புதுச்சேரி: அகில இந்திய மீனவர் சங்க செயற் குழுக் கூட்டம் செல்வராசு செட்டியார் வளாகத்தில் நடந்தது.நிர்வாகிகள் பெரியாண்டி, மூர்த்தி, தயாளன், சித்ரவேல், குமார், வடிவேல், புகழ், வேலு, புண்ணியமூர்த்தி, பத்மநாபன், கலைமணி, முரளி தாஸ், கதிரவன், சிவராமன், ஜெயவீரன், மாதவன், கவிமணி கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மீனவர்கள் அதிகப் படியாக சார்ந்து இருப்பது கப்பல் துறை சார்ந்த படிப்புகள் தான்.இப்படிப்புகளுக்கு புதுச்சேரியில் எந்த கல்லுாரியும் இல்லை. மற்ற மாநிலங்களில் தனியார் நடத்தும் கல்லுாரிகளில் நிர்வாக சீட்டுகளிலே அதிக கட்டணம் செலுத்தித் தான் புதுச்சேரி மீனவ மாணவர்கள் படிக்கின்றனர். எனவே தனியார் கல்லுாரியில் கப்பல் சார்ந்த படிக்கும் மீனவர் மாணவர்களின் கட்டணத் தொகையை புதுச்சேரி அரசே ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
