தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்தி எதிரொலி: 24 முதல் யு.ஜி., வகுப்புகள் துவக்கம்

தினமலர் செய்தி எதிரொலி: 24 முதல் யு.ஜி., வகுப்புகள் துவக்கம்

தினமலர் செய்தி எதிரொலி: 24 முதல் யு.ஜி., வகுப்புகள் துவக்கம்


UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM

ADDED : ஜூலை 19, 2023 09:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM ADDED : ஜூலை 19, 2023 09:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலையில் கடந்தாண்டு முதல் இளங்கலை வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 13 படிப்புகளில் 290 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு பல்கலை வளாகத்தில் இடவசதி இல்லாததால் வகுப்புகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. முதலில் ஜூலை 10 முதல் என்றும், பின்பு ஜூலை 17 முதல் துவங்கும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அகாடமி இயக்குனர் பெருமாள், கூடுதல் தேர்வாணையர் சலீமா, வளாக இன்ஜினியர் ஆனந்த், துறைத் தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் பல்கலையில் நடந்தது. இதில் போதிய இடவசதி ஏற்படுத்தி ஒரு வாரத்திற்குள் யு.ஜி., வகுப்புகள் துவங்க முடிவு எடுக்கப்பட்டது.பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தாண்டு மொத்தம் 13 படிப்புகளில் 290 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ், கணிதம் உள்ளிட்ட சில யு.ஜி., படிப்புகளுக்கு தற்போதுள்ள துறைகளிலேயே இடவசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன. வணிகவியல், உளவியல், ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட மாணவர்களுக்கு பல்கலை பி பிளாக்கில் 10 வகுப்பறைகள் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜூலை 24 முதல் யு.ஜி., வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us