தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடை நின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க ஆய்வு

இடை நின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க ஆய்வு

இடை நின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க ஆய்வு


UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM

ADDED : ஜூலை 22, 2023 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM ADDED : ஜூலை 22, 2023 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்:
இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அன்னுாரில் ஆய்வு நடந்தது.அன்னுார் வட்டாரத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் இடை நிற்கும் மாணவர்கள் குறித்து எமிஸில் பதிவு செய்யப்படுகிறது. இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஆய்வு கூட்டம் அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீ சுதா பேசுகையில், கடந்த 16ம் தேதி கணக்கெடுப்பின்படி, 186 மாணவர்கள் இடையில் நின்றுள்ளனர், இதில் 140 மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள்.ஆறு வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இடைநின்ற கணக்கெடுப்பில் சேர்க்கப்படுகின்றனர். இதற்காக சம்பந்தப்பட்ட மாணவர்களை வீட்டில் சென்று பார்த்து அவர்களிடமும் பெற்றோரிடமும் பேசி வருகிறோம். இதற்கு உள்ளாட்சி அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார். ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஒருங்கிணைந்த கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்விழி மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us