UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM
ADDED : ஜூலை 22, 2023 09:40 AM
கோவை:
பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைச்சு பணியாளர் சங்கத்தினர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் அளித்த மனுவில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023, விதி, 398ன்படி மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வுக்கு, பாதிப்பு ஏற்படுத்தும் விதிகளை அமல்படுத்தும் தேதியினை ஆறு மாத காலத்துக்கு தள்ளி வைக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர், கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு பதவி உயர்வு பெறுவதற்கு பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் பதவிகளுக்கு பட்டப்படிப்பு அவசியம் என்றாலும், தற்போது பணியில் உள்ளவர்கள் போதிய பணி அனுபவம் பெற்றுள்ளதால், அவர்களுக்கு தற்போது உள்ள கல்வித்தகுதியின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும்; இனி வருபவர்களுக்கு பட்டப்படிப்பு தகுதி நிர்ணயம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
