UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM
ADDED : ஜூலை 24, 2023 09:07 AM
கோவை:
ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் சார்பில், 11வது பட்டமளிப்பு விழா நேற்று ஈச்சனாரி அருகில் ஒரு மண்டபத்தில் நடந்தது.பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பட்டங்களை வழங்கி பேசுகையில், நீங்கள் பட்டம் பெறுவது என்பது, உங்கள் பெற்றோரின் வாழ்நாள் கனவு. அந்த கனவு பட்டம் பெறுவதுடன் முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கை என்பது, தொடர்ச்சியான கனவுகளை அடைவதற்கான பாதை. அதற்கு, தொடர்ந்து உங்களை மேம்படுத்திக்கொண்டே இருங்கள்.வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன; அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள தயாராக காத்திருங்கள். சாதனையாளர்களின் வாழ்க்கை பயணத்தை படியுங்கள். ஒரு நல்ல புத்தகம், உங்கள் வாழ்வை மொத்தமாக மாற்றும் வல்லமையுடையது, என்றார்.இந்நிகழ்ச்சியில், செவிலியர், மருந்தாளுனர், துணை மருத்துவ அறிவியல், பிசியோதெரபி உள்ளிட்ட பிரிவுகளில் இளநிலை முடித்த, 200 மாணவர்கள் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத், ஸ்ரீ அபிராமி கல்விநிறுவன தலைவர் பெரியசாமி, இயக்குனர்கள் குந்தவிதேவி, உமாதேவி, சுச்சரிதா, பாலமுருகன், டீன் அர்வின்பாபு, முதல்வர்கள் ரேணுகா, செந்தில்குமார், ஜெயபாரதி நரேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
