UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM
ADDED : ஜூலை 24, 2023 09:12 AM
இளையான்குடி:
இளையான்குடி பகுதியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி துவக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இளையான்குடி அருகே உள்ள கொங்கம்பட்டியில் கால்நடை வளர்ப்போர் சங்க கூட்டம் தலைவர் கருப்பையா தலைமையில் நடந்தது. செயலாளர் குமார், பொருளாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இளையான்குடி பகுதியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை வளர்ப்போருக்கு பசு மற்றும் கிஷான் அடையாள அட்டை வழங்க வேண்டும். கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும். கால்நடை வளர்ப்போருக்கு தமிழக அரசு வழங்கும் கால்நடை பராமரிப்பு கடன் தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும். கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். நிர்வாகிகள் செந்தில்குமார், சரவணன், ஷேக் சாகுல் ஹமீது பங்கேற்றனர்.
