UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM
ADDED : ஜூலை 24, 2023 11:45 AM
செனட் குழு கூட்டம் வரும் ஆக., 11ம் தேதி நடைபெறவுள்ளது. பொதுவாக, செனட் குழுவின் உறுப்பினர்கள் பல்கலைக்கு கூட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்களை பரிந்துரைப்பர். அதில் பல்கலையால் ஏற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ள தீர்மானங்கள், நிகழ்ச்சி நிரலில் அச்சிடப்படுவது வழக்கம். அதன் படி, பொள்ளாச்சி மகாலிங்கம் குறித்து ஆய்விருக்கை அமைக்கும் பரிந்துரையும், நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளது.செனட் குழுவின் கவர்னர் நாமினி எழுத்தாளர் சூரியக்குமாரிடம் கேட்டபோது, கோவை தொழில்துறை வளர்ச்சி, தமிழ் இலக்கியம், ஆன்மிக பணிகளில் பெரும் பங்காற்றிய பொள்ளாச்சி மகாலிங்கம் குறித்து ஆய்விருக்கை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, எதிர்கால மாணவர்கள், மக்கள் இவரின் பணிகள், சேவை குறித்து அறிந்துகொள்ள இயலும், என்றார்.
