UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM
ADDED : ஜூலை 24, 2023 12:03 PM
கோவை:
பகுதி நேர பி.இ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்று அவகாசம் முடிகின்ற நிலையில், ஆர்வம், தகுதியுள்ளவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில், 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பகுதி நேர பி.இ.,படிப்புகள் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இக்கல்வியாண்டு முதல், பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. பகுதி நேர படிப்புக்கான கலந்தாய்வை, கோவை சி.ஐ.டி., கல்லுாரி ஒருங்கிணைத்து நடத்துகிறது.இப்படிப்புகளில் சேர, 1,207 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். மொத்தம், 1,400 இடங்கள் உள்ள நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடங்கள் கிடைக்கும் என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை,இன்று மாலை5:00 மணி வரை,ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்கலாம். கட்டணம், பதிவு சார்ந்த விபரங்களை,www.ptbe-tnea.com என்ற இணையதளத்திலோ, 0422--2590080, 94869-77757 ஆகிய எண்கள் வாயிலாகவோ அறியலாம்.
