தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டாம்பூச்சிகளின் வாழ்விடமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்

பட்டாம்பூச்சிகளின் வாழ்விடமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்

பட்டாம்பூச்சிகளின் வாழ்விடமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்


UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM

ADDED : ஜூலை 25, 2023 09:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM ADDED : ஜூலை 25, 2023 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலூர்:
கடுமையான வெயிலில் சிறிது தூரம் நடந்து சென்ற பின் ஒரு மரத்தின் நிழலை தேடுகிறோம். அதேபோல் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அடர்ந்த மரங்களின் அடியில் அமரும் போது அவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இச்சூழலில் அதிகளவில் நிழல், ஆக்சிஜன் தரும் மரங்கள் அடர்ந்து செழித்து வளர்ந்துள்ள பகுதியாக கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு பல காரணிகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் முறியடித்து தீர்வு கிடைப்பதற்கான ஒரே சாத்தியம் மரக்கன்றுகள் வளர்ப்பது மட்டுமே. அவ்வாறு வளர்க்கப்படும் மரங்கன்றுகள், நாளடைவில் மரங்களாக வளர்ந்து காற்றில் இருந்து வரும் தூசிகளை தடுக்கிறது.நிலத்தடி நீரை தூய்மைப்படுத்துவதில் மரங்கள், அதன் வேர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மரங்கள் வளர்க்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்பட்டாலே மனிதன் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். இம்மாதிரியான விபரங் களை மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.காஞ்சனா, அரசு டாக்டர், கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையம்: 
கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் மரங்கள் அதிகமாக உள்ளன. இது தவிர மூலிகை தாவரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. மேலும் வளாகத்தின் ஒரு பகுதியில் அடர் வன குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி பல வகையான பறவைகள், பட்டாம்பூச்சிகளின் வாழ்விடமாக மாறியுள்ளது. ஆய்வக கட்டடங்கள் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் நடந்து வரும் நிலையில் எந்த ஒரு மரங்களையும் அகற்றாமல் பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அடர்ந்த மரங்களின் நடுவே அமரும் போது அவர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறது, என்றார்.வீடுதோறும் துளசி செடி
அழகேசன், ஆசிரியர்:
பள்ளிகளில் நாள்தோறும் தனியாக நேரம் ஒதுக்கி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் விளக்குவது அவசியம். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் கூடுதல் மரங்கன்றுகள் வளர்த்து பூமி மாசு அடைவதை தடுக்க வேண்டும். அடர்ந்த மரங்களுடன் குளுமையான சீதோஷ்ண நிலை இருந்தாலே உடல்ரீதியான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். கடுமையான வெப்பத்தில் ஆக்சிஜன் குறைபாட்டால் சிரமம் அடையும் மக்களுக்கு துளசி அதிகம் பயன்படுகிறது. அதனால் வீடு தோறும் துளசி செடிகளை வளர்க்க முன்வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us