தேசிய கல்வி கொள்கையால் தொழில் முனைவோர் அதிகரிப்பர்
தேசிய கல்வி கொள்கையால் தொழில் முனைவோர் அதிகரிப்பர்
UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM
ADDED : ஜூலை 27, 2023 09:33 AM
தேசிய கல்விக் கொள்கை- 2020 உருவாக்கப்பட்டு, மூன்றாமாண்டு துவங்கியுள்ளது. இந்நிலையில், அதன் பலன்கள் குறித்து, திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான என்.ஐ.டி.,யின் இயக்குனர் அகிலா, சென்னை தேசிய திறன் வளர் பயிற்சி மையத்தின் இணை இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்டோர் விளக்கினர்.தேசிய கல்வி கொள்கையால், திருச்சி என்.ஐ.டி.,யில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, அதன் இயக்குனர் அகிலா கூறியதாவது:
மாணவர்களின் திறமையை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை உருவாக்கவும், தேசிய கல்வி கொள்கை வாய்ப்புகளை வழங்குகிறது. இதற்கு முன், இன்ஜினியரிங் படிக்கும் ஒரு மாணவர், இடையில் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புகள் வழங்கப்படாது. தற்போது, வாய்ப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது. அத்துடன், அவர் விருப்பப்படும்போது, மீண்டும் அவர் தன் படிப்பை தொடரவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதேபோல், ஒரு படிப்பை தொடரும்போதே, கூடுதலாக வேறு மொழிகள் அல்லது தொழில்நுட்ப கல்வி படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால், ஒரே நேரத்தில் பெற்றோரின் விருப்பத்தையும், தன் விருப்பத்தையும் நிறைவேற்றி, புதிய வேலைவாய்ப்புகளை பெறுவோராக மாற முடியும். வருங்காலத்தில், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் வகையில், நிறைய மாணவர்கள் சுயதொழில் முனைவோராக மாறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.திறன் மேம்படும்எங்கள் மையத்தில், தொழிற்பயிற்சி முடித்த மற்றும் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு, புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில்நுட்ப கல்வியை வழங்கி வருகிறோம். வேலை வழங்குவோரே பயிற்சியில் பங்கேற்பதால், மாணவர்களின் திறன் மேம் படுகிறது; உயர் கல்விக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தேசிய கல்வி கொள்கையால், ஒரே நேரத்தில் பல்வேறு திறமைகளை வளர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என தேசிய திறன் வளர் மையம் இணை இயக்குனர் ராஜசேகர் கூறினார்.
