UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM
ADDED : ஜூலை 27, 2023 09:34 AM
அ நிறம் | அளவு
இது தொடர்பாக, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
கலவரம், இதர காரணங்களால் கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்த பிற மாநில குழந்தைகளை படிக்க அனுமதித்து 2019 ஆகஸ்டில் அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தால், பாதிக்கப்பட்டு மாநிலத்துக்கு வரும் குழந்தைகளிடம், பிறப்பு சான்றிதழ், இடம் மாற்ற சான்றிதழ், இடமாற்ற கடிதம் உட்பட தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்த கூடாது. மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்க வேண்டும். பெற்றோரிடம் இருந்து சுய சான்று கையொப்பம் பெறலாம். தகுதி கடிதத்துக்கு பதிலாக, குறிப்பிட்ட காலத்துக்கள் ஆவணங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்துக்கு உட்பட்டு, பி.யு.சி., மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
