தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் அவதி

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் அவதி

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் அவதி


UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM

ADDED : ஜூலை 27, 2023 09:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM ADDED : ஜூலை 27, 2023 09:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஜூன் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாததால் அவதிப்படுகின்றனர்.சென்னை மாநகராட்சியில், 300க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இதில் 2,500 ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில், பள்ளி கல்வித்துறையில் இருந்து இணைக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே இருந்த பள்ளிகள் என, இரண்டிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கடந்த ஜூன் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.மாத ஊதியம் வழங்கப்படாதது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் சத்தியநாதன், சென்னை மாநகராட்சி கல்வி அலுவலரிடம், நேற்று முன்தினம் மனு அளித்துள்ளார். அதில், ஜூன் மாதத்திற்கான ஊதியம், ஜூலை 25ம் தேதி வரையிலும் வழங்கப்படவில்லை. அதற்கான முன்னறிவிப்பும் இல்லை. இதன் காரணமாக, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, உடனடியாக ஊதியம் வழங்குவதுடன், தாமதத்திற்கான காரணத்தையும் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது:
விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் ஏற்கனவே உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகள் இணைப்பில், சில நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களுக்கான ஊதியம் இரண்டும் சேர்த்து, விரைவில் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us