கல்லுாரி மாணவருக்கு ஹெல்மெட் கட்டாயம்: கலெக்டர் உத்தரவு
கல்லுாரி மாணவருக்கு ஹெல்மெட் கட்டாயம்: கலெக்டர் உத்தரவு
UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM
ADDED : ஜூலை 27, 2023 10:02 AM
மைசூரு:
இருசக்கர வாகனம் பயன்படுத்தும் மாணவர்கள், கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே, கல்லுாரி வளாகத்தில் நுழைய அனுமதி அளிக்க வேண்டும் என மைசூரு கலெக்டர் ராஜேந்திரா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
மாவட்டத்தின், ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறையை செயல்படுத்த வேண்டும். கல்லுாரிகளில், வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக ஓட்டுவது அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த, கல்லுாரி நிர்வாகத்தினர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இரு சக்கர வாகனம் பயன்படுத்தும் மாணவர்கள், கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே, கல்லுாரி வளாகத்தில் நுழைய அனுமதி அளிக்க வேண்டும்.மைசூரு மாநகராட்சி எல்லையில், சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்பான பணிகள் நடக்கும் சாலைகளில், எச்சரிக்கை பலகைகள் பொருத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
