தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி: ஆஸ்கர் நாயகருக்கு கவுரவம்

ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி: ஆஸ்கர் நாயகருக்கு கவுரவம்

ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி: ஆஸ்கர் நாயகருக்கு கவுரவம்


UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM

ADDED : ஜூலை 27, 2023 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM ADDED : ஜூலை 27, 2023 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:
சென்னையில் நடக்கும் ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டிக்காக, ஆஸ்கர் விருது பெற்ற, பட நாயகர் பொம்மன் பெயர் மற்றும் யானையின் உருவம் கொண்ட லோகோ உருவாக்கி, நீலகிரிக்கு பெருமை சேர்க்கப்பட்டுஉள்ளது.ஹாக்கி இந்தியா அமைப்பு மற்றும் தமிழக அரசு விளையாட்டு துறை சார்பில், சென்னையில் ஆசிய சாம்பியன் போட்டி, ஆக., 3ல் துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.இதில், ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் ஆவண படத்தில் நடித்த, முதுமலையைச் சேர்ந்த யானை மற்றும் பாகன் பொம்மனை சிறப்பிக்கும் வகையில் போட்டிக்கான லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. யானை ஹாக்கி கொம்பு பிடித்து நிற்பது போன்றும், பொம்மன் என பெயரை தமிழில் எழுதியும் லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி நீலகிரிஸ் அமைப்பின் தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது: 
சென்னையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இலச்சினை, நீலகிரிக்கும், தமிழுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. போட்டிக்கான கோப்பை மற்றும் பொம்மன் பெயர், யானை அடங்கிய இலச்சினை, மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணமாக எடுத்து சென்று, இன்று காலை, நீலகிரி மாவட்டம் குன்னுார் வருகிறது. தொடர்ந்து, கோப்பை, ஈரோடு மாவட்டம் புளியம்பட்டிக்கு எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us