வளரறி மதிப்பீடு பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு
வளரறி மதிப்பீடு பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு
UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM
ADDED : ஜூலை 27, 2023 04:58 PM
சிவகங்கை:
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு செய்து செயலியில் பதிவு செய்வதில் சர்வர் பழுது காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும், எழுத்தும் பயிற்சியில் 4,5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பள்ளி வகுப்பறையில் வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி செயலியில் வளரறி மதிப்பீடு செய்து ஆன் லைனில் பதிவு செய்ய ஜூலை 19 முதல் 25 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி செயலிக்குள் சென்று வளரறி மதிப்பீடு செய்து பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து செயலிக்குள் செல்லும் போது தாமதம் ஏற்படுகிறது. வளரறி மதிப்பீடு செய்து பதிவு செய்ய முடியாத நிலை உள்ளதால், தொடக்க, இடை நிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் வகுப்பறையில் கல்வி கற்பிக்கும் பணியும் பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை இது போன்ற மதிப்பீடு பணிகள் வழங்கும் போது தொழில் நுட்ப குறைபாடு இல்லாமல் பதிவு செய்யும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
