தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ., கேமரா பயன்பாடு அறிய அதிகாரிகள் கேரளா பயணம்

ஏ.ஐ., கேமரா பயன்பாடு அறிய அதிகாரிகள் கேரளா பயணம்

ஏ.ஐ., கேமரா பயன்பாடு அறிய அதிகாரிகள் கேரளா பயணம்


UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM

ADDED : ஜூலை 28, 2023 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM ADDED : ஜூலை 28, 2023 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்:
கேரளாவில் சாலை விதிமீறல்களை கண்டறிய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு கேமரா தொழில்நுட்ப வசதி குறித்து, தமிழக போக்குவரத்து அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.கேரளாவில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க ஏதுவாகவும், அம்மாநில போலீசார், செயற்கை நுண்ணறிவு கேமராக்களை முக்கிய இடங்களில் நிறுவியுள்ளனர். இதனால், சமீப காலமாக அங்கு பெருமளவு விபத்துகள் குறைந்துள்ள நிலையில், இது குறித்து அறிந்து கொள்ள, தமிழக போக்குவரத்து இணை ஆணையர் முத்து தலைமையில் நான்கு பேர் அடங்கிய அதிகாரிகள் குழு, தமிழகத்தில் இருந்து கேரளா சென்றது. திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகம், செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்பின் கட்டுப்பாட்டு அறை, கேமராக்களை பொருத்திய கெல்ட்ரான் நிறுவனம் ஆகிய இடங்களுக்கு சென்ற தமிழக அதிகாரிகள் உரிய விளக்கங்களை கேட்டறிந்தனர்.திருவனந்தபுரத்தில் ஏ.ஐ., கேமரா பொருத்தப்பட்டுள்ள இடங்களிலும், முக்கிய சோதனைச் சாவடிகளிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில், ஏ.ஐ., கேமரா அமைப்பு பற்றி ஆய்வு செய்ய வந்த நாங்கள், இதன் வாயிலாக விபத்துகள், போக்குவரத்து விதிமீறல்கள் கணிசமாக குறைந்திருப்பதை கண்டறிந்தோம். இது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின், தமிழகத்திலும் இந்த முறையை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர். தமிழகத்தைப் போல் கர்நாடக மாநில போக்குவரத்து அதிகாரிகளும், கேரளா சென்று ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், புதுடில்லி அரசின் அமைச்சர் ஒருவரும் இது குறித்து தெரிந்து கொள்ள வர உள்ளதாக கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us