UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM
ADDED : ஜூலை 28, 2023 10:05 AM
சென்னை அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளின், 1.60 லட்சம் இடங்களுக்கு கவுன்சிலிங் துவங்கி உள்ளது. பொதுவாக, கவுன்சிலிங் துவங்கும் முன் இணைப்பு கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு நிலவரம் குறித்து, அண்ணா பல்கலை வல்லுனர் குழு ஆய்வு செய்வது வழக்கம். இந்த ஆண்டு, இத்தகைய ஆய்வு மேற்கொள்ளாமல், கல்லுாரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டது.இந்நிலையில், கவுன்சிலிங் முடிந்த பின், தேர்ச்சி குறைந்த, 100 கல்லுாரிகளை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து நேரடி கள ஆய்வு செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இதில் குறைபாடுகள் இருந்தால், சரி செய்ய கல்லுாரி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்படும். சரி செய்யப்படாவிட்டால், அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
