தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொரியா, ஐக்கிய அமீரகத்தில் ஒலிக்கும் தமிழ்

கொரியா, ஐக்கிய அமீரகத்தில் ஒலிக்கும் தமிழ்

கொரியா, ஐக்கிய அமீரகத்தில் ஒலிக்கும் தமிழ்


UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM

ADDED : ஜூலை 29, 2023 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM ADDED : ஜூலை 29, 2023 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
கொரியா, ஐக்கிய அமீரகத்தில் தமிழ்ச்சேவை குறித்து அயலகத்தமிழ் நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் பேசினர்.மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் அயலகத் தமிழ் முற்றம் நிகழ்ச்சி நடந்தது. கொரியத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ராமசுந்தரம், துபாய் கற்றல் கல்வி மையத் தலைவர் ரோகிணி பங்கேற்றனர். இதில் கொரியத் தமிழர் வாழ்வும், தமிழ்ப் பணியும் என்ற தலைப்பில் ராமசுந்தரம் பேசியதாவது:
கொரியாவில் 10 ஆண்டுகளாக செயல்படும் இச்சங்கம், தமிழகத்தில் இருந்து வருவோருக்கும், ஆராய்ச்சி மாணவருக்கும் வாழ்வியல் சூழலை கற்றுத் தருகிறது.தமிழ்க் குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்காமல் இருக்க நிகழ்ச்சிகள் மூலம் அக்குழந்தைகளை சமூகப்படுத்துகிறோம். மார்கழி சொற்பொழிவு, தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழ்ப் பள்ளிகள் துவங்கவும் முயற்சிகளை மேற்கொள்கிறோம். கச்சான் பல்கலையில் தமிழ் இருக்கைகளுக்கும் முயற்சி செய்கிறோம், என்றார்.அமீரகத்தில் தமிழ் என்ற தலைப்பில் ரோகிணி பேசியதாவது:
மாலை நேர வகுப்பாக தொடங்கிய தமிழ்ப் பணி இன்று கற்றல் கல்வி மையமாக உருவாகியுள்ளது. இதன் மூலம் துபாயில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு, தமிழையும், பாரம்பரியத்தையும் பயிற்றுவிக்கிறோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் தமிழ் நுாலகத்தை திறந்துள்ளோம். துபாயின் மிகப்பெரிய நுாலகமான முகமது பின் ரஷித் நுாலகத்தில் தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us