UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM
ADDED : ஜூலை 30, 2023 09:54 AM
அ நிறம் | அளவு
சென்னை:
பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்க உள்ளது.தமிழகத்தில் பி.ஆர்க்., கட்டட வடிவமைப்பு கலைக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஆக., 4 கடைசி நாள். மாநிலத்தில் உள்ள 45 கல்லுாரிகளில், 1,700 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
