UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM
ADDED : ஜூலை 30, 2023 02:36 PM
புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு இன்று கடைசி வாய்ப்பு என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் செல்வராஜூ விடுத்துள்ள செய்திகுறிப்பு:
2023-24ம் ஆண்டுக்கான பி.டெக்., படிப்பிற்கான முதற்கட்ட இட ஒதுக்கீடு, புதுச்சேரி அரசின் ஒருங்கிணைந்த சேர்க்கைக் குழு சென்டாக் கடந்த 20ந் தேதி வெளியிட்டது. புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள படிப்புகளுக்கான ஒதுக்கீடு கிடைக்கப் பெற்ற மாணவ, மாணவியர் சேர்க்கையை உறுதி செய்ய இன்று 29ம் தேதி கடைசி நாள். பல்கலை வளாகத்தில் உள்ள கலை அரங்கில் உள்ள அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பூர்த்தி செய்த படிவத்துடன் அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வந்து சேர்க்கைக்கான ஆணையை பெற்றுக்கொள்ளலாம். அலுவலகம் மாலை 4:00 மணி வரை இயங்கும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
