தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிட் இந்தியா வினாடி வினாவில் அமலோற்பவம் பள்ளி சாதனை

பிட் இந்தியா வினாடி வினாவில் அமலோற்பவம் பள்ளி சாதனை

பிட் இந்தியா வினாடி வினாவில் அமலோற்பவம் பள்ளி சாதனை


UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM

ADDED : ஜூலை 30, 2023 02:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM ADDED : ஜூலை 30, 2023 02:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்திய தேசிய அளவிலான பிட் இந்தியா வினாடி வினா போட்டியில், புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பரத்குமார், புவியரசு சாதனை படைத்துள்ளனர்.பிட் இந்தியா வினாடி வினா போட்டி-2023ல் நாடு முழுவதிலும் உள்ள 1.5 லட்சம் பள்ளிகள் பங்கேற்று, அதில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவிலான சுற்றுகளில் 348 பள்ளிகள் தேர்வாகின. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அளவில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு ரூ.2.5 லட்சம் ரொக்கமும், குழுவில் இடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கமும் பரிசாக அறிவிக்கப்பட்டது. தேசிய அளவிலான சுற்றுகள் மும்பை பந்த்ராவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 24ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், மாநில அளவிலான சுற்றுகளில் வெற்றி பெற்ற அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் பரத்குமார், புவியரசு ஆகிய இருவருக்கும், பள்ளிக்கு வெற்றி பதக்கத்துடன் ரூ.2.5 லட்சம் ரொக்கத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வழங்கினார். பரிசு பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அமலோற்பவம் கல்வி குழுமத்தின் நிறுவனர் லுார்துசாமி வாழ்த்தி, பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us