துணை பொதுத்தேர்வு எழுதியோருக்கு உயர்கல்விக்கு வழிகாட்ட உத்தரவு
துணை பொதுத்தேர்வு எழுதியோருக்கு உயர்கல்விக்கு வழிகாட்ட உத்தரவு
UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM
ADDED : ஜூலை 30, 2023 02:47 PM
கோவை:
பொதுத்தேர்வில் தோல்வியை தழுவியோருக்கான, துணை பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியான நிலையில், அவர்கள் உயர்கல்வி தொடர, அந்தந்த பள்ளிகளில் வழிகாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 துணை பொதுத்தேர்வு 750 பேரும், பத்தாம் வகுப்புக்கான தேர்வை 3,200 பேரும் எழுதினர். இவர்களுக்கான ரிசல்ட் வெளியான நிலையில், பள்ளிகளில் இருந்து உரிய மாணவர்களை தொடர்பு கொண்டு, உயர்கல்வியில் சேர வழிவகை செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளி வாரியாக, துணை பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், அவர்களின் பெற்றோருக்கு, உயர்கல்வி கவுன்சிலிங் வழங்க வேண்டும்.குறிப்பிட்ட மாணவர் துணை பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஆர்வமான உயர்கல்வி துறை ஆகியவற்றை கேட்டறிந்து, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர்க்க ஆவண செய்ய வேண்டும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) அலுவலகத்திலும், உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு ஆலோசனை பிரிவு உள்ளதால், ஆசிரியர்களுடன் மாணவர்களை அனுப்பி வைத்து, கவுன்சிலிங் பெற ஆவண செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
