தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவருக்கு காமராஜர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு

மாணவருக்கு காமராஜர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு

மாணவருக்கு காமராஜர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு


UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM

ADDED : ஜூலை 30, 2023 02:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM ADDED : ஜூலை 30, 2023 02:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
காமராஜர் விருதுக்கு தகுதியான மாணவர் பட்டியலை, மாவட்ட கல்வித்துறை தயாரித்து, கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும், என பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தமிழ் வழியில் படிக்கும், மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில், 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ், பிளஸ் 2 பயிலும் சிறந்த, 15 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 20 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். நடப்பாண்டுக்கான காமராஜர் விருது குறித்து, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தரப்பில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us