தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சேர்க்கை முடிவுகள் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சேர்க்கை முடிவுகள் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சேர்க்கை முடிவுகள் வெளியீடு


UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM

ADDED : ஜூலை 31, 2023 09:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM ADDED : ஜூலை 31, 2023 09:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின், மருத்துவ கலந்தாய்வு குழுவின், https://mcc.nic.in என்ற இணையதளம் வாயிலாக நடக்கும். இந்தாண்டுக்கான கலந்தாய்வு இம்மாதம் 20ம் தேதி தொடங்கிய நிலையில் முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியாகின. அதன்படி, நீட் தேர்வில், 720 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதல் இடம் பிடித்த விழுப்புரம் பிரபஞ்சன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளார். 715 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில், 6ம் இடத்தையும், தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்த, சென்னையைச் சேர்ந்த சூர்யா சித்தார்த், டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.மேலும், 715 மதிப்பெண்கள் எடுத்து, தேசிய அளவில் ஒன்பதாவது இடத்தையும், தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்த சேலம் வருண், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளார். மேலும், 716 மதிப்பெண்கள் பெற்ற கவுஸ்தவ் பவுரி; 711 மதிப்பெண்கள் பெற்ற சாமுவேல் ஹர்ஷித், 710 மதிப்பெண்கள் பெற்ற ஜேக்கப் பிவின் ஆகியோர், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். இதில், சாமுவேல் ஹர்ஷித் மட்டும், மாநில அரசின் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கும் விண்ணப்பித்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us